தீயணைப்பு ஒத்திகை

02/10/2012 09:09

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், "இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது' என்பது குறித்த, விழிப்புணர்வு ஒத்திகை, தீயணைப்பு துறை மூலம் நடத்தி காண்பி க்கப்பட்டது . டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் தலைமை வகித்தார். தீயணைப்பு கோட்ட அலுவலர் கருணாகரன் முன்னிலை வகித்தார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். உலக முதியோர் தின விழா:ராமநாதபுரத்தில், மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு, உலக முதியோர் தின விழாவை கொண்டாடின. கூட்டமைப்பு தலைவர் சேசுராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதியோரக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடை, பந்து எறிதல் போட்டியில் வென்ற முதியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.முன்னதாக, அரண்மனை வாசல் முன்பிருந்து, சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.