தீர்க்கப்பட்ட குப்பை பிரச்சனை...

20/10/2010 14:13

நமதூரிலிருந்து புதுவலசை நலம் விரும்பி என்ற முகவரியில் ஒருவர் நமது புதுவலசை குழுமத்தில் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதில் நமதூரில் குப்பை எடுத்து வந்த டிராக்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக குப்பை எடுக்கும் பணியில் தெய்வு ஏற்பட்டது. இதற்கிடையில் சிலர் தாம் குப்பை எடுக்கப் போவதாக கூறி அவரும் 1 மாதத்திலேயே நிறுத்திவிட்டதால் ஆங்காங்கே குப்பை தேங்கிக் கிடப்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.

இது சம்மந்தமாக நமதூர் சகோதரர்கள் அந்த பிரச்சனைக்கு பல்வேறு கருத்துக்களைக் கூறியது மட்டுமல்லாமல் அந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்ப்பட முயற்சி செய்தும் வந்தார்கள். இந்நிலையில் நமதூரில் சிலர் குப்பை எடுக்க முடிவு செய்து ஏற்க்கனவே வசூலித்துக் கொண்டிருந்த 30 ரூபாய்கும் அதிகமாக கேட்பதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் தேர்போகி முத்துக்குமார் இந்தப் பொருப்பை வீட்டுக்கு ரூபாய் 35 பெற்றுக் கொண்டு கடந்த ஒரு வாரமாக குப்பை எடுக்கும் பணியை செய்து வருகிறார்.

இது போன்ற பிரச்சனைகளை செய்வதற்க்காகத்தான் ஊராட்சி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் மக்களும் ஊராட்சி மன்றங்களின் பணிகள் பற்றி தெறிந்து கொள்ளவில்லை ஊராட்சி மன்ற நிர்வாகிகளும் மக்கள் பிரச்சனையில் தாமே முன்வந்து கவனம் செலுத்துவதில்லை. இந்த இலட்சனத்தல் வார்டுக்கு இரண்டு வார்டு மெம்பர் வெற, அவர்களெல்லாம் என்ன செய்கிறார்கள் என்று தெறியவில்லை. மக்கள் அவர்களை விரட்டி வேலை வாங்காத வரை அவார்கள் மக்களுக்காக வேலை செய்ய மாட்டார்கள்.

புதுவலசை நலம் விரும்பிக்கும் அதற்க்காக முயற்சித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெறிவித்துக் கொள்கிறோம்.