துபாயில் சகோ. தாசின் அவர்களுக்கு பாராட்டு

27/07/2010 13:26

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

26-06-2010

துபாயில் சகோ. தாசின் அவர்களுக்கு பாராட்டு

நமதூரைச் சேர்ந்த சகோதரர் தாசின் அவா்கள் தனது டிரஸ்ட்ன் மூலமாக பல்வேறு நலத்திட்டப் பணிகளை நமதூரில் செய்து வருகிறார்கள். நமதூர் அரபி ஒலியுல்லா தெடக்கப்பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்க்கு நமதூர் கல்விக்குழு பல்வேறு முயற்சிகள் செய்துவந்த நிலையில் தமது சொந்த செலவில் ஒரு கட்டிடம் கட்டிக் கொடுப்பதாக சகோதரர் தாசின் அவர்கள் உறுதியளித்து இருந்தார். தற்ப்போது அந்த கட்டிடவேலகள் துவங்க ஆரம்பித்துள்ளது. கட்டிடத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 25 இலட்சங்களாகும்.

இதற்க்காக சகோதரர் தாசின் அவர்களை பாராட்டியும் மேலும் அவரது பணி நமதூர் மக்களுக்கு கிடைப்பதற்காக அவரை ஊக்கப்படுத்தும் விதத்திலும் யு ஏ இ வாழ் புதுவலசை மக்கள் சார்பாக நேற்று 25-6-2010 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சகோதரர் தாசின் அவர்களது அலுவலகத்தில் அவர்களை பாராட்டும் விதமாக ஒரு சந்திப்புக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டு அதில் அபுதாபி, சார்ஜா, புஜைரா மற்றும் துபாயில் இருந்தும் வந்திருந்த நமதூர் சகோதரர்கள் கலந்துகொண்டனர்.