துபாயில், கடந்த 14 ஆண்டுகளில் 13 ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்

05/09/2010 13:02

துபாயில், கடந்த 14 ஆண்டுகளில் 13 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளனர். துபாய் முஸ்லிம் விவகாரத்துறை தலைவர் ஹுடா அல் கபி குறிப்பிடுகையில், "கடந்த 14 ஆண்டுகளில் இந்தியா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 72 நாடுகளை சேர்ந்த 13 ஆயிரத்து 946 பேர் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளனர். மதம் மாறியவர்களில், ஆண்களை விட பெண்கள் தான் அதிகம். ரம்ஜான் மாதங்களில் தான் அதிகம் பேர் முஸ்லிம்களாக மாறியுள்ளனர்' என்றார்.

dinamalar