துபையில் நடைபெற்ற EPMA பொதுக்கூட்டம்

17/11/2010 20:34

நேற்று 16-11-2010 அன்று யுஏஇயில் ஹஜ்பெருநாள் கொண்டாடப்பட்டதை அடுத்து நமதூர் எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் பொதுக்கூட்டம் துபை கராமாவில் உள்ள ஷாஃபிய்யா பள்ளியில் மாலை 8 மணியளவில் நடைபெற்றது. அதில் நமதூர் நண்பர்கள் கலந்துகொண்டனர். அப்போது பல்வேறு பிரச்சனைகள் சம்மந்தமாக தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. EPMA வின் உறுப்பினர் படிவம் தயார் செய்து அதை அனைவருக்கும் அனுப்புவது,

2. வரும் ஜனவரி 2011ல் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பது,

3. EPMA வின் பளைய விதிமுறைகள் மாற்றியமைக்கப் பட்டு, புதிய விதிமுறைகள் வகுப்பது எனவும்,

4. மீடியாக்களில் யார் மனதையும் புண்படும்படியான வாதங்களை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற வேண்டுகோள் உட்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின் கணக்கு விபரம் வாசிக்கப்பட்டு கூட்டம் நிறைவேறியது.