தூய்மை கிராம இயக்க விருது புதுவலசை ஊராட்சிக்கு விருது

30/06/2012 20:15

ராமநாதபுரம்:திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமில்லாத கிராம ஊராட்சிகளுக்கு, தூய்மை கிராம இயக்க விருதுக்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று ஊராட்சிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 
ஊராட்சிகளில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகள் பராமரிக்க வேண்டும். மாணவர்களுக்கு சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அங்கன்வாடி கழிப்பறை, சுகாதார வளாகங்கள் முறையாக பயன்படுத்த வேண்டும்.திறந்த வெளியில் யாரும் மலம் கழிக்க கூடாது. இந்த அடிப்படையில் நூறு சதவீதம் பேணி காக்கும் கிராம ஊராட்சிகளுக்கு தூய்மையான கிராம இயக்க விருது நடப்பாண்டு அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது.இதற்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுவலசை மற்றும் கும்பரம் ஊராட்சிகள், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உத்திரகோசமங்கை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ள்ளன. இந்த விருதை முதல்வர் ஜெ., வழங்க உள்ளார். 

தினமலர்