தேடப்பட்ட தாலிபான் தலைவர் கைது

06/11/2010 15:44

பாகிஸ்தானில் மிங்கோரா நகரில் உள்ள போலீஸ் பயிற்சிக்கல்லூரி மீது கடந்த ஆண்டு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. 14 வயது சிறுவன் இந்த தாக்குதலை நடத்தி பலியானான். இதில் 17 போலீஸ் பயிற்சியாளர்கள் பலியானார்கள்.
 

 

இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவரை போலீசார் தேடி வந்தனர். அவர் கராச்சியில் உள்ள ஆரங்கி நகரில் உள்ள மோமினாபாத் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர் பெயர் கோர் யூசுப். அவர் தடை செய்யப்பட்ட தெக்ரிக் தலீபான் இயக்கத்தின் தளபதி ஆவார். இவரை கைது செய்தது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

 

நக்கீரன்