தேவிபட்டிணம் (தாவுக்காடு) அருகே வீடு புகுந்து 14 பவுன் நகை- பணம் கொள்ளை

04/08/2010 16:23

 

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே உள்ள தாவுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது50). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்தார். காளியம்மாளின் பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி அவர்கள் வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
 
கணவர் இறந்த பிறகு காளியம்மாள் அங்கு உள்ள சத்துணவு மையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு அவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மீண்டும் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த காளியம்மாள் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்து 14 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து காளியம்மாள் தேவிபட்டிணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.