நக்சல் தீவிரவாதிகளின் ஆயுதக் குவியல் சிக்கியது

04/11/2010 15:30

 

நக்சலைட் தீவிரவாதிகள் ஆயுத குவியல் சிக்கியதுஆந்திராவின் நல்லமலை காட்டுக்குள் மீண்டும் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளனர். அவர்கள் ஊழல் அரசியல் தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
 
இதனால் நல்லமலை காட்டில் அதிரடிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது காட்டுக்குள் பதுங்கி இருந்த நக்ச லைட்டுகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தங்கி இருந்த முகாமில் ஏராளமான ஆயுத குவியல் சிக்கியது.
 
அதில் நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், வாக்கி- டாக்கி போன்றவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
நக்சலைட்டுகள் மிரட்டலை தொடர்ந்து ஆந்திராவில் ஊழல் புகாரில் சிக்கிய அரசியல் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

மாலைமலர்.காம்