நஜியா பள்ளி வேன் மோதி 2 வயது சிறுவன் பலி - பனைக்குளத்தில் நடந்த பயங்கரம்

17/07/2011 22:15

இன்று காலை வழக்கம்போல் பள்ளி மாணவர்களை ஏற்ற ஊருக்குள் வந்த நஜியா மெட்ரிக்குலேசன் பள்ளி வேன் ஒன்று கிழக்குப் பனைக்குளம் பகுதிக்கு வந்துள்ளது. பனைக்குளம் செய்யது பதுருதீன் அவர்களின் வீட்டு அருகில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பின்னோக்கிச் சென்ற வேனின் பின் புறம் நின்றிருந்த 2 வயது இசாம் என்ற செய்யது பதுருதீன் அவர்களின் மகன்மீது மோதியது. அதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

 

தன் அண்ணனை வேனில் ஏற்றிவிட வீதிக்கு வந்த சிறுவனை அந்த வேனே பலி கொண்டது பனைக்குளம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வாகன ஓட்டுனரின் கவனக்குறைவாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பெற்றோரின் கவனக்குறைவு காரணமாகவே இந்த இழப்பு நேர்ந்துள்ளதாக தெறிகிறது.

அல்லாஹ் காப்பாற்றவேண்டும்.

ஊர்களுக்குள் வாகனங்கள் செல்லும் போதும் வரும்போதும் பெற்றோர் மிகுந்த கவணமாக இருக்க வேண்டும் என இச்சம்பவம் எச்சரிக்கிறது.