நமதூரில் பெருநாள் தினத்தில் கடற்கரையில் நடைபெற்ற ஆபத்தான படகு சவாரி

13/09/2010 09:39

நமதூர் கடற்கரை பெருநாள் தினத்தில் களைகட்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று, இந்தவருடம் சற்றுமேலே போய் படகு சவாரி நடைபெற்றது. ஒருவருக்கு 15 முதல் 20 ருபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. படகில் படகு செலுத்துபவர்கள் 2 நபர்கள் மட்டுமே இருந்தார்கள் ஆனால் படகு சவாரிக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் சவாரி செய்தனர். இதுபோன்ற படகு சவாரியில் ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் இழப்புகளை கருத்தில் கொண்டு அதை முறைபடுத்த அங்கு யாரும் இல்லாத நிலையில் மக்கள் பாதுகாப்பற்ற படகு சவாரி செய்து இருக்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் நமதூர் அய்யங்கன்னு டாக்டர் மகள் இதுபோன்ற ஒரு படகு விபத்தில் பரிதாபமாக உயரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து படகு சவாரி நிறுத்தப்பட்டது. இது சட்ட விரோதமானதும் கூட என எச்சரிக்கை செய்யப்பட்டது. 

புகைப்படம் மற்றும் செய்தி சகோதரர் முஹமது இம்தியாஸ், புதுவலசை.