நமதூரில் இந்த வருட நோன்புப் பெருநாள்

21/08/2012 22:12

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

வழக்கம்போல் இந்தவருட நோன்புப் பெருநாளும் தொழுகையில் ஆரம்பித்து கடற்கரையில் முடிந்தது. இந்த வருடம் வளைகுடா மற்றும் இந்தியாவில் 30 நேன்பு வந்தது பெரும் மகிழ்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அல்ஹம்துலில்லாஹ்.

நமதூர் மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசலில் ஆண்களுக்கும் மதரஸா மற்றும் அருகே அமைந்துள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் பெண்களுக்கும் என சுன்னத்வல் ஜமாஅத் பொருநாள் தொழுகை நடைபெற்றது.

தவ்ஹீத் ஜமாஅத்தை பொருத்தவரை வழக்கம்போல் தவ்ஹீத் திடலில் தொழுகை நடைபெற்றது.

அதே போல் ஃபித்ரா வினியோகமும் இ.பி.எம்.ஏ மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டது.

மாலைப் பொழுது பெரும்பாலன மக்களுக்கு கடற்கரையில் கழிந்தது. சிலர் போட்டிங் (படகு சவாரி) செய்தனர். கடந்தவருடமே இந்த ஆபத்தான படகு சவாரி குறித்து நம் சகோதரர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அது பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தவருடம் தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து மக்களையும் படகு சவாரி வசதி ஏற்படுத்தி தந்த படகோட்டிகளையும் எச்சரிக்கை செய்துவிட்டுச் சென்றனர்.