நமதூர் இளைஞர்கள் மத்தியில் சில நாட்களாக நடந்துவரும் குழுச்சண்டை

06/02/2011 23:00

கடந்த சில நாட்களாக நமதூர் இளைஞர்கள் மத்தியில் பெரும் குழுச்சண்டை துவங்கி நடந்து வருகிறது. நமதூர் முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இளைஞர்கள் சிலரும் இன்னும் சில நபர்களும் ஊருக்குள் ரோந்து (பாதுகாப்பு வலம்) சுற்றுப்பொவதாக ஜமாஅத்தில் அனுமதி பெற்று சென்றுள்ளனர். ரோந்து சுற்றுபவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்ன என்று விளங்காமல் பேருந்து நிலையத்து கொடிக்கம்பத்தில் இருந்தவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதனால் அங்கு இருந்தவர்களுக்கும் ரோந்து சுற்றிச் சென்றவர்களுக்கும் இடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாகி விட்டது. மறு நாள் ரோந்து சுற்றி வந்தவர்கள் வீட்டை ஒரு பிரிவினர் முற்றுகையிட்டு கூச்சலிட்டுள்ளனர். 

 

இந்நிலையில் நமதூர் விளையாட்டு மைதானத்தில் விளையாட சென்றவர்களுக்கிடையே முந்தைய பிரச்சனையை காரணமாக வைத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில்  ரோந்து குழுவைச் சேர்ந்த ஒருவர் தேவிபட்டினம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அன்றைய தினம் இரவு சிலர் சில வாகனங்களுக்கு பெயின்ட் அடித்துள்ளனர் சேதப்படுத்தியுள்ளனர். முந்தைய பிரச்சனையின் விரோதத்தால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கருதிய ரோந்து குழுவினர் இரண்டாவது முறையாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். ஆனாலும் இன்னம் இரு பிரிவினர் மத்தியில் அமைதி ஏற்பட்டதாக தெறியவில்லை ஒருவரை ஒருவர் தாக்க ஆயத்தப்படுவதும், முறைப்பதும் என பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் சிலரை காவல் துறை தேடிக்கொண்டும் இருக்கிறது.