நமதூர் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2010 - 2011

27/05/2011 09:38

இந்த வருடம் பத்தாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. நமதூரைப் பொருத்தவரை இந்த வருடமும் நல்ல முடிவுகளே வந்தள்ளது. மொத்தம் 90 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில் மாணவர்கள் 33 பேரும் மாணவிகள் 53 பேரும் அடங்குவர். அவர்களில் இருவர் தேர்வு எழுதவில்லை.

 

முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் விபரம்

 

1. நஜ்வா நஸ்ரின் (1109795) 480 மதிப்பெண்கள்

அவர் பெற்ற மதிப்பெண்கள் - T 94, E 90, M 100, S 100, SS 96 = 480

2. வனிதா (1109823) 472 மதிப்பெண்கள்

அவர் பெற்ற மதிப்பெண்கள் - T 93, E 85, M 100, S 100, SS 94 = 472

3. சதாம் சரிபு (1109764) 460 மதிப்பெண்கள்

அவர் பெற்ற மதிப்பெண்கள் - T 88, E 84, M 99, S 99, SS 90 = 460

 

பாடவாரியாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நஜ்வா நஸ்ரின் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

கணிதம் மற்றும் அறிவியலில் நஜ்வா நஸ்ரின் மற்றும் வனிதா ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சமூக அறிவியல் பாடத்தில் சரண்யா என்ற மாணவி 97 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

 

400க்கு மேல் 18 மாணவர்கள் எடுத்துள்ளனர். தேர்ச்சி விகிதம் இந்த வருடம் 98.8 சதவிகிதமாக உள்ளது. ஜெகன் என்ற ஒரு மாணவன் மட்டும் தோ்வில் தவறிவிட்டதால் 100 சதவிகிதம் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

கடந்த அண்டு முதல் மதிப்பெண் 486, இரண்டு பேர் கணிதத்திலும் 4 பேர் அறிவியலிலும் 100 மதிப்பெண் பெற்று இருந்தனர். 17 பேர் 400க்கு அதிகமாக மதிப்பெண் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது