நமதூர் முன்னால் ஜமாஅத் செயலாளருக்கு வக்கீல் நோட்டீஸ்

05/12/2010 14:33

புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் முன்னால் செயலாளராக இருந்த சகோதரர் எம்.கே. முஹம்மது அலி அவர்களுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

கடந்த காலங்களில் சகோதரர் ஜபருல்லா கான் அவர்களுக்கும் ஜமாஅத் நிர்வாகத்திற்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் நடந்துவந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அது போல் சகோதரர் ஜபருல்லா கான் அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, (2006) ஒரு வீடுகட்டுமானத்திற்கு ரசீது போடுவது சம்மந்தமாக ஜமாஅத் துணைச் செயலாளராக இருந்த சகோதரர் எம்.கே. முஹம்மது அலி அவர்களிடம் நமதூர் சகோதரர் ஒருவர் முறையிட்ட போது சகோதரர் ரகுமத்துல்லா அவர்கள் குறுக்கிட்டு முறையற்ற முறையில் பேசியதாக எழுந்த தகறாரில் கைகலப்பு ஏற்பட்டது. இந்தப் பிரச்சனை போலீஸ் கேஸாக மாறியது.

 

இந்த வழக்கில் 4 சாட்சிகள் சகோதரர் ரஹ்மத்துல்லா அவர்களை அடித்ததை பார்த்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும், பொய்யாக சாட்சி கூறியதாக சகோதரர் ஜபருல்லா கான் அவர்கள் மீது சகோதரர் எம்.கே. முஹம்மது அலி அவா்கள் ஒரு மனுவை ஜமாஅத்தில் கொடுத்திருந்தார், (2007) சம்மந்தப் பட்ட பிரச்சனைக்கும் அதனால் ஊர் ஜமாஅத்துக்கு  ஏற்பட்ட செலவுகளுக்கும் சகோதரர் ஜபருல்லா கான் அவர்களே காரணம் என்று கூறப்பட்டு இருந்தது. அந்த விசயத்தில் ஜமாஅத் நிர்வாகம் விசாரித்து ஜமாஅத்துக்கு ஏற்பட்ட செலவுகளில் சகோதரர் ஜபருல்லா கான் அவர்கள் மீது ரூ. 15,000 மும், சகோதரர் ரஹ்மத்துல்லா அவர்கள் மீது ரூ. 20,000 மும் அபராதமாக விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அப்போது சகோதரர் எம்.கே. முஹம்மது அலியும் நிர்வாகத்தில் செயல்பட்டுக்கொண்டு இருந்தார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன் ஜமாஅத் கூட்டத்தில் இது விசயமாக சகோதரர் ஜபருல்லா கான் அவர்கள் கொடுத்த மனுவில் தாம் அந்த தொகையை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார் அது மட்டுமில்லாமல் சம்மந்தப்பட்டவர்கள் சகோதரர் ரகுமத்துல்லா அவர்களும் சகோதரர் எம்.கே. முஹம்மது அலி அவர்களுமே தவிர நான் வெறும் சாட்சியாகத்தாக் இருந்தேன் இந்தப் பிரச்சனையில் என்னை ஜமாஅத் விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பளைய நிர்வாகத்தினர் கலந்துகொள்ளாததால், கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்பட வில்லை, இதை சம்மந்தப்பட்ட முன்னால் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் சகோதரர் ரகுமத்துல்லா ஆகியோர் முன்னிலையில் பேசி ஒரு முடிவெடுப்பதென கூட்டத்தில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பிரச்சனையை மேற்கோல் காட்டி, ஊரில் எனக்கு அபராதம் விதித்தது எனக்கு அவமானமாக இருக்கிறது என்றும், இதற்கு சட்டப்படி பதிலளிக்க மறுக்கும் பட்சத்தில் சகோதரர் எம்.கே. முஹம்மது அலி அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்கப்படும் என எச்சரித்து சகோதரர் ஜபருல்லா கான் அவர்கள் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

சகோதரர் எம்.கே. முஹம்மது அலி சார்பில் அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்றும், ஜமாஅத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றும் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெறிகிறது.

 

இந்தப் பிரச்சனையில் நாம் கவணிக்க வேண்டியது......

 

இதற்கு முன் ஜமாஅத்தில் அபராதம் விதிக்கப்பட்டவர்கள் முறையாக கடிதம் கொடுத்து, தாம் செய்த தவறை உணர்வதாக கூறி, பின் அவரது அபராதம் தள்ளுபடி செய்யப்பட்ட கடந்தகால நடைமுறைகளையாவது பின்பற்றினால் சற்று சிக்கல் இல்லாமல் இருக்கும், மேலும் இதுவரை அபராதம் விதிக்கப்பட்டவர்களும், இனிமேல் விதிக்கப் படுபவர்களும் இதை ஒரு கருவியாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

 

தனி நபர்மீது மானநஷ்ட வழக்கு தொடுப்பதாக சிலர் நினைக்கின்றனர். இதில் கண்டிப்பாக ஜமாஅத்துக்கும், அதன் செயல்பாட்டுக்கும் மிகப்பெரிய சிக்கல் வரும் என்பதை மறந்துவிடக் கூடாது. முன்னால் நிர்வாகத்தினர் மட்டுமின்றி இந்நாள் நிர்வாகத்தினரும் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு இச்செயல் கொண்டுசெல்லும் என்பதை உணர வேண்டும். இது விசயத்தில் சகோதரர் ஜபருல்லா கான் மற்றும் சகேதாரர் எம்.கே. முஹம்மது அலி ஆகியோருடன் உரிய முறையில் பேசி பிரச்சனைக்கு தீர்வுகான வழி வகை செய்வதே சாலச் சிறந்ததாகும். இல்லை என்றால் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக ஜமாஅத்தை முடக்க இந்த வக்கீல் நோட்டீசே காரணமாக அமைந்துவிடும் என எச்சரிக்கை மணி அடிக்கப்படுகிறது.