நம்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது

20/03/2010 16:20

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 20-3-2010

நம்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது

கடந்த இரண்டுமாதங்களுக்கு முன் பனைக்குளத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தாமரைஊரணி நாகம்மாள் வீட்டுக்கு எதிர் வீட்டில் வீடுபுகுந்து திருடிய கயவர்கள் நமதூர் காயிதே மில்லத் நகரில் ஒரு வீட்டில் இரண்டு மொபைல் போன்களை திருடிச் சென்றுள்ளனர்.

இரு குறித்து தேவிபட்டிணம் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேவிபட்டிணம் காவல்துறை ஆய்வாளர் சகோ. ராஜு அவர்கள் தலைமையில் திருடர்களை தேடும் பணி துவங்கியுள்ளது.