நரேந்திர மோடியின் அன்புச் சகோதரி ஜெயலலிதா மீண்டும் நிருபனமாகும் நிகழ்வுகள் - முஸ்லிம்கள் புறக்கணிப்பார்களா?

16/05/2011 09:20

அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டது என்று தெறிந்த உடனேயே முதலில் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்னவர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி.

முஸ்லிம்களை இனப்படுகொலை செய்து இந்திய அளவில் பல்வேறு தரப்பினராளும் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளபோதிலும் மோடி தமது செல்வாக்கை மதவாதிகள் மத்தியில் பெற்றுள்ளார். 

முஸ்லிம்கள் அவர் சென்னை வரும்போதெல்லாம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டம் செய்த இயக்கங்களில் தமுமுக தற்பொழுது மமக என்று அரசியல் பிரவேசம் கண்டு 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்று ஆளும் கட்சியில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பதவியேற்பு விழாவுக்கு ஜெ அழைத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று மோடி ஜெயலலிதாவின் பதவியேற்பு வழாவுக்கு சென்னை வருவதாக குஜராத் அரசு தெறிவித்திருந்தது. இன்று காலை மோடி சென்னை வந்து சேர்ந்தார்.

 குஜராத் இனப்படுகொலைக்குப் பின் நடந்த தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றபோது ஜெயலலிதா மோடி பதவியேற்பு விழாவில் களந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.