நரேந்திர மோடியை கொல்ல சதி திட்டம்: விக்கி லீக்ஸ் வெளியிட்ட தகவல்

06/12/2010 10:05

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

 

விக்கிலீக்ஸ் என்ற இணைய தளம், அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது. அதில் இந்தியா தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.


கடந்த 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 19ந் தேதி அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட ரகசிய தகவல் ஒன்றில் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் லஸ்கர் இ தொய்பா இயக்கம், தமிழகம் மற்றும் கேரளாவில் தளம் அமைக்க முயன்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.


அதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டியிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய இந்தியாவின் தென்மாநிலங்களில் முகாம்கள் அமைத்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட அந்த அமைப்பு முயற்சி மேற்கொண்டதும் அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் லஷ்கர் இ தொய்பாவின் செயல்பாடுகள் பரந்துவிரிந்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.nakkheeran.in