நானோ காரை திரும்ப பெறும் டாடா நிறுவனம்!

11/11/2010 21:01

டாடா நிறுவனத்தின் குறைந்த விலை தயாரிப்பான நானோ கார்களின் பாதுகாப்பு குறைபாடுகளின் காரணத்திற்காக அந்த கார்களை திரும்ப பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
 

நடுத்தர மக்களின் கனவை நினவாக்கும் வகையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் நானோ காரை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நானோ கார்கள் தீப்பிடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


நாடு முழுவதும் தற்போது 70 ஆயிரத்துக்கும் அதிகமான நானோ கார்கள் இயங்கி கொண்டிருக்கின்றன. நானோ கார்களில் தீப்பிடிப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. இதையடுத்து நானோ காரை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டு/ளதாகவும், ஆனால் எத்தனை கார்கள் என்பதை அறிவிக்க இயலாது என்றும் கூறியுள்ளார்.


மேலும், புதிய நானோ கார்களில் கேடலிடிக் கன்வெர்டர் என்னும் கருவி பொருத்தப்படுதாகவும், இந்த கருவி கார் தீப்பிடிப்பதை தடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

நக்கீரன்