நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மை: சிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

29/11/2010 14:52

நடிகை ரஞ்சிதா -நித்யானந்தா வீடியோ வெளியாகி பெரும் பரபரப்புக்குள்ளானது.  இதையடுத்து நித்யானந்தா கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

இவர் மீதான வழக்கு பெங்களூர் ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

 

 

இந்நிலையில் நித்யானந்தா மீது பெங்களூர் ராம்நகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது சிஐடி.  குற்றப்பத்திரிக்கையில் நித்யானந்தா மீது பல்வேறு புகார்களை சுமத்தியுள்ளது சிஐடி.

இளம்பெண் ஒருவரின் 27 பக்க பாலியல் குற்றச்சாட்டும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மை என்றும் குற்றபத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை தகவலை உயர்நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளது சிஐடி. nakkheeran.in