நிபந்தனை ஜாமீனில் ஜூலியன் அசாங்கே விடுதலை

15/12/2010 11:10

 

அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் அசாங்கே பாலியல் வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தார். இதனையடுத்து அசாங்கே நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக நீதிமன்றக் காவலில் இருந்த அசாங்கேவை நிபந்தனையில் விடுவிக்கக் கோரி பல மனித உரிமை அமைப்புகள் போராடின. அவைகள் திரட்டியளித்த 2 இலட்சம் பவுண்ட் ரொக்கத்தின் பேரில் வெஸ்ட்மின்டர் நீதிமன்றம் அசாங்கேவை நிபந்தனையில் விடுவித்துள்ளது. முன்னதாக, அசாங்கேவை ஜாமீனில் விடுவிக்குமாறு 6 லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

dinakaran.com