நோன்புப் பெருநாள் தர்மம் மற்றும் பொருநாள் தொழுகை

21/08/2012 22:33

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அல்ஹம்துலில்லாஹ் இந்தவருடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 90 ஏழைகளுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது உள்ளுர் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது 15580.00 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை மூலம் பெற்றது 15000.00 ஆக மொத்தம் 30580.00 (முப்பதாயிரத்து ஐநூற்றி எண்பது ரூபாய்) பித்ரா வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழக்கம் போல் புதுவலசை காயிதே மில்லத் நகர் உமர் ஊரணி எதிரில் அமைந்துள்ள தவ்ஹீத் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது அதில் ஆண்களும் பெண்களுமாக 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதில் சகோதரர் அப்துல் ஹமீது ஆலிம் அவர்கள் ரமளானுக்குப் பின் நடந்து கொள்ளவேண்டிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்தார்கள்.