பட்டணம்காத்தானில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

04/11/2010 15:43

 ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அரசுப் பள்ளியில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக்கின் கனடா-இந்தியா கூட்டுப் பயிலகத்தின் கீழ் இயங்கும் மகளிர் மேம்பாட்டுப் பிரிவும்,ராமநாதபுரம் இன்னர் வீல் கிளப்பும் இணைந்து நடத்திய இம்முகாமுக்கு இன்னர்வீல் அமைப்பின் தலைவி லெட்சுமி வர்தினி தலைமை வகித்தார்.

 

மகளிர் மேம்பாட்டுóப் பிரிவு மேலாளர் மு.மனைச்செல்வி முன்னிலை வகித்தார்.

 

 ராமநாதபுரம் மருத்துவர் அ.செய்யதா பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசினார்.

 

முகாமில் பட்டணம் காத்தான் மகளிர் மன்ற உறுப்பினர்கள்,பள்ளி ஆசிரியையகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.