பனைக்குளம் பிரச்சனை - நிஜாம் பஸ்மீது கல்வீச்சு

20/09/2010 11:03

பனைக்குளத்தில் கடந்த வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர் 2 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இதனால் சனிக்கிழமையன்று பனைக்குளம் நிஜாம் மற்றும் சுல்தான் டிரான்ஸ்போர்ட் பேருந்துகள் ஓடவில்லை. நேற்று மீண்டும் பேருந்து சேவையை துவங்கியது நிர்வாகம். நேற்று மாலை தாமரைஊரணி பேருந்து நிருத்தம் அருகே பேருந்து கண்ணாடிமீது கற்கல் வீசப்பட்டது. அதில் பின்புறக் கண்ணாடி சேதமடைந்தது. யாருக்கும் காயம் ஏதும் இல்லை. இன்றும் தொடர்ந்து பேருந்து சேவை மாற்றுப் பேருந்து மூலம் தடையின்றி செயல்பட்டு வருகிறது.