பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமா: ஹினா ரப்பானி கண்டனம்

23/09/2011 14:52

காபூலில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ புகலிடம் அளித்துவருவதாக அமெரிக்கா கூறியதற்கு பாகிஸ்தான் ‌வெளியுறவு அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 28ம் திகதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்காண்டின்டல் ஹொட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் தொடர்புடையவர்களுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ புகலிடம் அளித்து பாதுகாத்து வருவதாக அமெரிக்க ராணுவ தலைமை தளபதி அட்மிரல் மைக்முல்லன் கூறியிருந்தார்.

தற்போது ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கவுர் இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ எந்தவகையிலும் புகலிடம் கொடுக்கவில்லை. அதற்கான எந்த ஒரு ஆதாரத்தினையும் மைக்முல்லன் தெரிவிக்கவில்லை என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தியது பயங்கரவாதிகள் தான் அதற்கு வருந்துகிறோம். அதற்கு பிறகு அமெரிக்காவில் தாக்குதல் இல்லை.

ஆனால் பாகிஸ்தானில் இதுவரை 311 தற்கொலைப்படை தாக்குல்கள் நடந்துள்ளன. மேலும் பாகிஸ்தானில் அப்பாவி மக்கள் மீது அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் நடத்துவது சரியா, இதனை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

newsonews.com