பயணக் கட்டண அட்டை (Travel Card System) முறை விரைவில் இந்தியாவில் அறிமுகபபடுத்த அரசு திட்டம்

01/11/2010 12:40

உலகின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து சாதணங்களான பேருந்து, ரயில் மற்றும் வாடகைக் கார் ஆகியவற்றை பயன்படுத்த பணப்பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டு அதற்கென்று பிரத்யோக கார்டை பயன்படுத்தி வருகின்றனர். யுஏஇ யில் வசிப்பவர்கள் பயன்படுத்தும் பஸ் கார்டு போல் பல நாடுகளில் அமளில் உள்ளது இந்த முறை.

இந்த முறையை இந்தியா முழுவதும் ஒரே கார்டைக் கொண்டு பஸ், ரயில், ஆட்டே, டேக்ஸி என எந்த போக்குவரத்து முறையில் பயணம் செய்தாலும் இந்த அட்டையை பயன்படுத்தும் முறையை விரைவில் நடைமுறப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி நாம் பயணத்திற்க்கு முன்பே கார்டை வாங்கி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதில் பணம் ஏற்றிவைத்துக் கொள்ள வேண்டும். பயணத்தின் போது வாகனங்களிலோ அல்லது நடைமேடைகளிலோ இதற்கென வைக்கப்பட்டு இருக்கும் கருவிகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும். இதில் ஏறும் இடத்திலும் இறங்கும் இடத்திலும் கார்டை கருவியில் பயன்படுத்திய உடன் பயணக்கட்டணம் உங்கள் கணக்கில் இருந்து எடுத்தக்கொள்ளப்படும். இதற்க்கான கருவிகள் பொருத்தும் பணி முடிவடைந்த பின்னரே சேவை அறிமுகப்படுத்தப்படும்.

அது மட்டுமின்றி மொபைல் சிப் (சிம்கார்டு) போன்ற ஒரு முறையையும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அந்த சிப்பை மொபைல் போன்களில் போட்டுக் கொண்டு அதிலிருந்து போக்குவரத்து கட்டணங்ளை செழுத்த முடியும். அதை செல்போன் நிருவனங்களின் சேவையை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளமுடியும்.

அதற்க்காக முதற் கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களுர், போப்பால், ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்த ஏற்ப்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இந்த முறை விரைவில் நாட்டின் முக்கிய நகரங்களில் அமளுக்கு வரும் எனவும் அரசு வட்டாரங்கள் தெறிவிக்கின்றன.

இந்த சேவை பார்க்கிங் கட்டணம், நெடுஞ்சாலைக் கட்டணம் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுத்தும் வண்ணம் விரிவுபடுத்தப்பட உள்ளது. கிரெடிட்கார்டு டெபிட்கார்டுகளைப் போல் இல்லாமல் கட்டணங்கள் உடனுக்குடன் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட உள்ளது.

இதற்க்கான குறியீடு மற்றும் சேவைக்கான பெயர் ஆகியவற்றை இறுதி செய்ய தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும் செய்திக் குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

 

நன்றி சகோ. ஹிஸாமுதீன்.

Source: https://in.news.yahoo.com/48/20101101/804/tnl-govt-plans-one-card-for-travel-acros.html