பர்வீன் பஸ் விபத்து நமதூரைச் சேர்ந்த நான்கு பயனிகளுக்கு காயம்

09/01/2011 06:12

நேற்று நமதூர் வழியாக சென்னை சென்ற பர்வீன் பஸ் சென்று கொண்டிருந்த வழியில் திண்டிவனத்திற்கு முன் போலூர் அருகே நின்று கொண்டிருந்த மணல் லாரியில் இடது புறமாக மோதியதில் முன்பகுதியில் உள்ள 5 சீட்டுகள் சேதமடைந்தது. இதில் நமதூரிலிருந்து சென்ற 4 பயணிகளும் அடங்குவர்.

 

நமதூரைச் சேர்ந்த ஒரு பெண் பயணிக்கு முன் சீட்டில் மோதியதால் தலையில் லேசான காயத்துடனும், மற்றொரு ஆண் பயணிக்கு காலில் கண்ணாடி துண்டு குத்தி லேசான காயத்துடனும் மற்றொருவருக்கு எந்தக் காயமும் இன்றி தப்பினர். நமதூரைச் சேர்ந்த மற்றொரு பெண்பயணிக்கு பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. உடனே திண்டிவனம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவிக்குப் பின் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

 

இந்நிலையில் செய்தி கேள்விப்பட்ட உறவினர்கள் சென்னை விரைந்துள்ளனர்.

 

பஸ்ஸை ஓட்டிச்சென்ற டிரைவரும் அவரின் உதவியாளரும் சம்பவத்திற்குப்பின் தலைமறைவாகிவிட்டனர். டிரைவரின் கவனக்குறைவோ அல்லது தூக்கமோ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என தெறிகிறது.

 

காயமடைந்த சகோதரிக்காக பிரார்த்தனை செய்வோம், அல்லாஹ் அவர்கள் விரைவில் நலம்பெற உதவி செய்வானாக....