பள்ளி விளையாட்டு மைதானங்கள் சீரமைப்பு

19/04/2010 16:12

19-4-2010

பள்ளி விளையாட்டு மைதானங்கள் சீரமைப்பு

புதுவலசை அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானமும் செவ்லத்து மைதானமும் சீரமைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மைதானத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த உயரழுத்த மின் கம்பங்கள் தெற்க்கு வேலி ஓரமாக மாற்றப்பட்டது.

அரபி ஒலியுல்லா தொடக்கப்பள்ளி கட்டுமானப்பனிகள் தொடங்க இருப்பதால் பளைய மீன்கடை இடிக்கப்பட்டது, அதன் குறுக்கே சென்ற மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டது, வேப்பமரம் வெட்டபட்டது, அதன் தொடர்சியாக செவ்லத்து மைதானத்தின் குறுக்கே சென்ற மின்கம்பங்களில் உயரழுத்த மின்கம்பம் தெற்க்கு ஓரத்திலும், சாதாரன மின்கம்பங்கள் வடக்கு ஓரத்திலும் மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

கால்பந்து மைதானத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்பே செய்துவிட்ட காரணத்தால், செவ்லத்து மைதானத்தில் வாலிபால் மைதானமும், கிரிக்கெட் பிட்ச் ஆகியன தற்போது அமைக்கப் பட்டுள்ளது. ஆகவே பள்ளி மைதான வளாகத்திற்குள் செல்ல சங்கத்து இளைஞர்களுக்காக பள்ளிவாசலுக்கு எதிரில் அமைக்கப்பட்டு இருந்த சிறிய வாசல் அடைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய விளையாட்டு ஆசிரியர் முத்து முருகன் முயற்சியால் பள்ளி வளாகத்தில் இருந்த வாலிபால் மைதானத்தை சுற்றி கல்வைத்து கட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக பேஸ்கட்பால் மைதானம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.