பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

27/10/2010 09:40

பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 18 ஆம் தேதிக்கு சிபிஐ தனி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை ரேபரேலி மாவட்ட கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மூன்று மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் மீதான நீதிமன்றத்தின் நிலை என்பதை தெரிவிக்க கோரி, பிரதிவாதி ஒருவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற நவம்பர் மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

webdunia.com