பாபர் மசூதி சட்ட விரோத தீர்ப்பை கண்டித்து சென்னையிலும் மதுரையிலும் முஸ்லிம்களின் பேரணி ஆர்ப்பாட்டம்

28/01/2011 11:41

பாபர் மசூதி குறித்து அலகாபாத் ஐகோர்ட் லக்னோ பெஞ்ச் அளித்த தீர்ப்பை கண்டித்து, மதுரையில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஐகோர்ட்டை நோக்கி பேரணி நடந்தது.
 

ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு நுழைவுவாயில் முன்பு, 22 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியை, போராட்டக்குழுத் தலைவர் சைபுல்லா காஜா துவக்கி வைத்து கூறியதாவது :450 ஆண்டுகள் பழமையான பாபர் பள்ளிவாசல் தொடர்பான 60 ஆண்டு வழக்கில், 2010 செப்.,30ல் அளித்த தீர்ப்பு சட்டப்படி இல்லை. கட்டப்பஞ்சாயத்து அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. இது மதநம்பிக்கையான தீர்ப்பு. இதை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்தி சுப்ரீம் கோர்ட் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

 

ஜன.,30ல் சேலத்தில் நடக்கும் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும், என்றார்.மாநில தலைவர் பக்கீர் முகமது அல்தாபி, செயலாளர் கோவை ரஹீம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.காலை 11 மணிக்கு ஆரம்பித்த பேரணி, மதியம் ஒரு மணிக்கு சிம்மக்கல் ரவுண்டானாவில் நிறைவடைந்தது. இவர்கள் ஐகோர்ட்டை முற்றுகையிடலாம் எனக்கருதி, அங்கு மாவட்ட எஸ்.பி., மனோகர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

தினமலர் 28-1-2011