பாபர் மசூதி தீர்ப்பு நாளை 30-9-2010 , 3.30 மணிக்கு

29/09/2010 09:44

பொருப்புள்ள நம் சமுதாய நண்பர்களுக்கு....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பாபர் மசூதி வழக்கு கடந்த 18 வருடங்களாக தேங்கிக்கிடந்தது, வருடம் வருடம் டிசம்பர் 6 ஆம் தேதி வந்துவிட்டால் முன்னெச்சரிக்கை கைதுகளும், தீவிரவாத அச்சுறுத்தல் என்ற அரசின் நாடகமும் அதனால் முஸ்லிம்களுக்கு கிடைத்த அவப்பேரும் சற்று முடிவுக்கு வரத் தொடங்கிவிட்டது. பாபர் மசூதி இருந்த இடம் முஸ்லிம்களுடையதா அல்லது சங்பரிவாரங்கள் சொல்வதைப் போல் அவர்களுடையதா என்ற கேள்விக்கு மட்டுமே நாளை லக்னோ உயர் நீதி மன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இது இவ்வழக்கை பொருத்தவரை ஒரு தொடக்கமே என்றாலும், நாம் இழந்த உரிமையை மீட்க்கவும், நாம் பட்ட துன்பத்திற்க்கும், இழந்த உயிர்களுக்கும், பெற்ற அவப்பேருக்கும் கிடைக்கப் போகும் வெகுமதியாகவே கருதத் தோனுகிறது.

தீர்ப்பு கண்டிப்பாக முஸ்லிம்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற எண்ணம் நம் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது. அதே போல் எதிர் தரப்பும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவே தெறிகிறது. ஒரு சிலர் தீர்ப்புக்கு பின் மேல் முறையீடு என்றும், முஸ்லிம்கள் தீர்ப்பை மதிக்காதவர்கள் அதனால் நாங்களும் மதிக்கமாட்டோம் என்றும், தீர்ப்பு எப்படி இருந்தாலும் கோவில் கட்டுவது உறுதி என்றும் அதே நேரத்தில் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்றும் பலவிதமான கருத்ததுக்களை எதிர்தரப்பினர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாம் செய்யவேண்டிய கடமை என்ன?

தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும் பாதிப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அனைத்து ஊடகங்களும் மத்திய மாநில அரசுகளும் கருதுவதால் நாடே உச்சகட்ட பாதுகாப்பு (?) வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவர்களின் பாதுகாப்பு பற்றி நாம் முன்னறே பாபர் மசூதி இடிப்பின் போது கண்டுள்ளதால் அரசின் பாதுகாப்பில் நமக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நம்மை பாதுகாக்க தகுதியுள்ள வல்ல ரஹ்மானிடம் நமது உரிமையை மீட்க்கவும் அதனால் ஏற்ப்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் பிரார்த்தனை செய்யவேண்டியது நமது கடமை.

நாளை மாலை சரியாக 3.30 மணியளவில் (இந்திய நேரம்) லக்னோ உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. நமது கடைசி ஆயுதமான பிரார்த்தனையை ஒவ்வொறு பர்லான தொழுகைக்குப்பின்னும் கேட்டுக் கொண்டே இருப்போம்.

அல்லாஹ் நீதி வழங்குவதில் சிறந்தவன் அவனே நமக்குப் போதுமானவன்....