பார்வை இழப்பைத் தடுக்க இனி ஒரு ஊசி மட்டும் போதும்

18/05/2011 11:09

பார்வை இழப்பைத் தடுக்க இனி ஒரு ஊசி மட்டும் போதும்

 


பார்வை இழப்பைத் தடுக்க இனி ஒரெ ஒரு ஊசி போதும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஊசி மூலம் ஸ்டிராய்டை கண்களுக்குப் பின்னால் இடம்பெற செய்து விட்டால் பார்வையிழப்பை எற்படுத்தக்கூடிய கண்நரம்பு அடைப்பை அது கட்டுப்படுத்தும். இதன் மூலம் திடீர் பார்வை இழப்பு ஏற்படாது என்று கண் சிகிச்சை நிபுணரும் விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றவர்களில் ஒருவரான ஆலிவர் பேக்ஹவுஸ் கூறினார். விழித்திரைக்கு அருகே எரிச்சலுக்கான மருந்தை அந்த ஊசி வெளியிடும். எனவே கண் எரிச்சலால் ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்கலாம். மேலும் இந்த ஊசி எதிர்கால பார்வையிழப்பைத் தடுக்கவும் பயன்படுத்தலாம். பலவிதமான கண் நோய்களைக் குணப்படுத்தவும் இந்த ஊசி உதவும். நீரிழிவு நோய் மற்றும் வயது காரணமாக ஏற்படும் பார்வைக் குறைபாடுகளையும் தவிர்க்க முடியும்.

 

வணக்கம் மலேசியா