பாலஸ்தீனம் நோக்கி சென்ற மலேசிய கப்பலை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது

18/05/2011 10:50

மலேசிய கப்பலை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது 

பாலஸ்தீன மக்களுக்கு மனிதநேய உதவிப் பொருட்களைக் கொண்டு சென்ற மலேசிய கப்பல் ஒன்றை இஸ்ரேலிய கடல்படை ராணுவம் தாக்கியுள்ளது.

 

மலேசிய நேரப்படி இன்று காலை மணி 11.54- க்கு அக்கப்பல் தாக்கப்பட்டதாக PGPF  எனப்படும் உலக அமைதி அறவாரியம் கூறுகிறது. 

 

GAZA நீர் பகுதியிலிருந்து ஒன்றரை கடல் மைல் தூரத்தில் பாலஸ்தீன பாதுகாப்பு கடல் பகுதியில் அத்தாக்குதல் நடந்துள்ளது.

 

எனினும் அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என வணக்கம் மலேசியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.