பாலஸ்தீனியர்கள் அவமதிப்பு அதிகாரிக்கு கடுங்காவல் இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை

02/11/2010 10:17

கடந்த சில நாட்களுக்கு முன் பாலஸ்தீன கைதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய இஸ்ரேல் இராணுவ அதிகாரிகளின் நடவடிக்கைகளை ஒரு இணையதளத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து அந்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டது அதில் ஏராளமான மொபைல் புகைப்படங்கள் சிக்கியது. அதில் ஒரு பாலஸ்தீன கைதிகளை தலையில் ஆயுதத்தை வைத்து அவமானப்படுத்திய நடவடிக்கைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு 5 மாத கடுங்காவல் தண்டனை விதித்து இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்னும் இதில் சம்மந்தப்பட்டுள்ள இதிகாரிகள் இரண்டுபேர் மீது வழக்கு நடைபெற்று வருவாதாகவும் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி தெறிவிக்கிறது.