பிரச்சனைக்ககவே உருவாக்கப்பட்ட விநாயகர் ஊர்வலங்கள் கோவையில் 9 முஸ்லிம்கள் உட்பட 14 பேர் கைது

13/09/2010 10:22

கோவை- குனியமுத்தூரில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக சனிக்கிழமை இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸôரை கீழே தள்ளிய கும்பல், எதிர்த் தரப்பினரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி குனியமுத்தூர், குறிஞ்சி நகரில் விநாயகர் சிலை சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலமும் உள்ளது.

அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டதாகக் கூறி, போலீஸôர் சிலையை அப்புறப்படுத்தினர். இதையடுத்து சனிக்கிழமை இரவு மீண்டும் அதே இடத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது.

தகவலறிந்ததும் குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்திற்குச் சென்று வேலுமணி, ரவி உள்ளிட்ட சிலரைப் பிடித்து அழைத்துச் சென்றனர்.

அப்போது ஒரு கும்பல், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸôரை கீழே தள்ளிவிட்டு, வேலுமணி, ரவி உள்ளிட்டோரைத் தாக்கியது. இத் தாக்குதலின்போது, சப்-இன்ஸ்பெக்டரையும், போலீஸôர் சிலரையும் அக் கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு, மாநகர காவல் ஆணையர் சி.சைலேந்திர பாபு,  துணை ஆணையர்  நாகராஜ், உதவி ஆணையர் பாலாஜி சரவணன் மற்றும் போலீஸôர் விரைந்து சென்று, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த வேலுமணி கொடுத்த புகாரின் பேரில், கரும்புக்கடை சம்சுதீன் (24), குனியமுத்தூரைச் சேர்ந்த சமீர் (26), இப்ராஹீம் (27), உமர் (28), முகமது பைசல் (25), சாரமேடு அசாருதீன் (21), உக்கடம் முகமது சம்சுதீன் (23), கரும்புக்கடை இலியாஸ் (24) உள்பட 9 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

அமீர் அப்பாஸ், முகமது அசாருதீன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், குனியமுத்தூர் கனகராஜ் (37), மணிகண்டன் (23), முருகேசன் (23), சங்கர் (23) மற்றும் சதீஷ் ஆகிய 5 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

இரு தரப்பிலும் 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீஸôர் தேடி வருகின்றனர்.

பிரச்சனைக்கான பின்னணி என்ன?

1. மதுக்கரையில் மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றபோது, இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இம்மோதலில் மூவருக்கு காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள கடை ஒன்றை விஷமிகள் அடைத்து நொறுக்கினர்.

2. கோவையில் செல்வபுரம், கல்லாமேடு, பண்ணாரி அம்மன் கோயில் அருகே விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி இருந்தனர். அப்பகுதியில் மாற்று சமூகத்தினர் வசிப்பதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னையாகும் என்று காரணம் கூறி அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதால் போலீஸôருடன் மோதலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 141 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

3. உக்கடம் அல்-அமீன் காலனியில் விநாயகர் சிலை வைக்க, இந்து மக்கள் கட்சியினர் போலீஸôரிடம் அனுமதி கோரி இருந்தனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதால், தடையை மீறி விநாயகர் சிலையை நிறுவப்படும் அக் கட்சியினர் தெரிவித்தனர். இதையடுத்து, கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் நாகராஜன் தலைமையில் பேச்சு நடந்தது. இதில் சமரசம் ஏற்படாததால் 20 பெண்கள் உள்பட 37 பேர் கைது செய்யப்பட்டனர். இச் சம்பவம் குறித்து உக்கடம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மத வழிபாடுகளில் மற்றவர்களுக்கு எதிராகவோ, அல்லது மற்றவர்களை விமர்சிக்கவோ, மற்றவர்களை சீண்டவோ அனுமதி கேட்பதும், விநாயகர் ஊர்வலங்களை மாற்றுமதத்தினர் வசிக்கும் தெருக்கள், அவர்களின் வழிபாட்டு தளங்கள் உள்ள தெருக்களில் அநாகரிகமான வார்த்தைகளில் விமர்சனம், கோசம் போட்டுக்கொண்டு செல்வது ஆகிய காரணங்களே பிரச்சனைகள் வருவதற்கு காரணம்.

ஹிந்து மதத்தவர்கள் நடத்தும் மற்ற எந்த விழாக்களிலும் இதுபோன்ற பதட்டமோ பிரச்சனையோ வருவதில்லை. இந்த விழாக்கள் பக்தி என்ற பெயரில் சங்க்பரிவாரக்கும்பளால் மத மோதல்களை கட்டவிழ்த்து விடவே நடத்தப்படுகிறது.

 Dinamani