பிரான்ஸுக்கு ஒசாமா எச்சரிக்கை - அல்ஜெசீராவில் ஆடியோ வெளியீடு

28/10/2010 14:40

பெண்கள் முக்காடு அணிய தடை:  பிரான்சு நாட்டுக்கு  பின்லேடன் எச்சரிக்கை 

 
பிரான்சு நாட்டில் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. பிரான்ஸ் நாட்டுப்படையினர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையுடன் சேர்ந்து முஸ்லிம்களை தாக்கி வருகிறார்கள்.
 
இதற்காகத்தான் நைஜீரியா நாட்டில் பிரான்சு நாட்டினர் 5 பேரை கடத்தி வைத்துள்ளோம்.
 
நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் காரியங்களால் நீங்கள் உரிய பிரதி பலனை சந்தித்து கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் நாங்களும் பதிலடி கொடுப்போம்.
 
எங்கள் மக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொன்று விட்டு உங்கள் நாட்டில் நீங்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?
 
நீங்கள் எங்களை கொன்றால் நாங்கள் உங்களை கொல்வோம். நீங்கள் எங்களை கடத்தினால் நாங்கள் உங்களை கடத்துவோம். நீங்கள் எங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தினால் நாங்கள் உங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவோம். நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு சமமாக நாங்களும் செய்வோம்.
 
ஜார்ஜ் புஷ் தொடங்கிய ஆப்கானிஸ்தான் போருக்கு நீங்களும் ஆதரவாக இருப்பதால் நீங்களும் அழிவை சந்திப்பீர்கள்.
 
இவ்வாறு கூறி இருக்கிறார்.
 
ஆனால் பின்லேடன் குரல் மட்டும் தான் இதில் ஒலிக்கிறது. இது உண்மையிலேயே பின்லேடன் குரலா? அல்லது யாராவது அவனுடைய குரலில் மிமிக்ரி செய்து பேசி இருக்கிறார்களா? என ஆய்வு நடக்கிறது.

 

 

மாலைமலர்