புதிய தேசமாக தென் சூடான்

09/02/2011 20:33

உலகின் புதிய நாடாக தென் சூடான் இடம்பெறவுள்ளது. இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அதிகாரப+ர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தென் சூடானுக்கு ஆதரவாக 98.83 சதவீத வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். முறைப்படி ஜூலை மாதம் தான் தெற்கு சூடான் தனி அரசாக அறிவிக்கப்படவுள்ளது. இதன் தலைநகர் ஜீபாவாக இருக்கும்.

புதிய நாடாக உருவாகவுள்ள தென் சூடானுக்கு உலக நாடுகள் அனைத்தும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை இந்நிகழ்வானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

வீரகேசி 9-02-2011