புதுவலசை உள்ளாட்சி தேர்தல் நிலவரம்

03/10/2011 22:26

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

கடந்த ஒரு இரண்டு வாரங்களாக உள்ளாட்சித் தேர்தல் சம்மந்தமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. நமதூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் வழக்கத்தை விட சற்று விறுவறுப்பாக உள்ளது. காரணம் பெரிய அரசியல் கட்சிகள் முதல் சிறிய லட்டர் பேடுகள் வரை தனித்து களம் காண்பதால் ஒரு பதவிக்கு பலர் போட்டியிடுகின்றனர்.

 

புதுவலசை நிலவரம் அவ்வப்போது வந்து போனாலும் இறுதியாக 3 அணியாக ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். திமுக மற்றும் அதிமுக என இரண்டு அணிகள் வழக்கமாக களம் இறங்கும், ஆனால் இந்தத் தேர்தலில் திமுக சகோதரர் மீரான் அவர்களுக்காக பின்வாங்கிக் கொண்டு அவர்களுக்கு வழிவிட்டுள்ளதாக தெறிகிறது. திமுக சார்பில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த சகேதரர் ஜெய்னுதீன், சகேதரர் அஹமது கபீர் மற்றும் சகோதரர் நிஜாமுதீன் ஆகியோர் இறுதியில் தமது மனுக்களை திரும்பப் பெற்றுவிட்டனர்.

 

நமதூரில் 

1. சகோதரி செய்யது ராவியத்து பசரியா அவர்கள் (சகோதரர் மீரான் ஒனி அவர்களின் சகோதரி) எஸ்டிபிஐ சார்பிலும் (சின்னம் - கத்தரிக்கோல்)

2. சகோதரி ஹாஜி சலினா பேகம் (ஜபருல்லா கான் அவர்களது மனைவி) அதிமுக சார்பிலும் (சின்னம் - கை உருளை)

3. சகோதரி சபிரா பேகம் (சகோதரர் ரசூல் தீன் அவர்களது மனைவி) மமக சார்பிலும் (சின்னம் - பூட்டுச் சாவி) ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

9 உறுப்பினர் பதவிக்கும் மூன்று அணிகளின் சார்பில் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.

 

புதுவலசையிலிருந்து கவுன்சிலர் பதவிக்கு சகோதரி உம்முல் ஜெசிமா (சாகுல் ஹமீது அவர்களின் மனைவி) அவர்கள் (சின்னம் - அரிக்கன் விளக்கு) மமக சார்பில் போட்டியிடுகிறார்கள். மேலும் இப்பதவிக்கு தேர்போகியை சேர்ந்த கணேசன் திமுக சார்பிலும், கிருஷ்ணன் அதிமுக சார்பிலும், மாடசாமிகேவில் மணி தேமுதிக சார்பிலும், பளைய தேர்போகி கோவிந்தராசு வி.சி சார்பிலும் மற்றும் முத்துக்குமார் சுயேட்சையாகவும் களத்தில் உள்ளனர்.

 

வெற்றிவாய்ப்பு நிலவரம் யாருக்கு சாதகமாக இருக்கிறது என கணிக்க முடியாத நிலையில் உள்ளது. எல்லோரும் நம்பிக்கையுடன் களத்தில் உள்ளனர். மக்களின் மனநிலையை பொருத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.