புதுவலசை தவ்ஹீத் பள்ளி வேலைகள்

09/08/2009 09:41

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

30-8-09

அல்ஹம்துலில்லாஹ்புதுவலசை தவ்ஹீத் பள்ளி வேலைகள் தற்க்காலிகமாக ...  முடிக்கப்பட்டு ரமளான் இரண்டாம் நாளிலிருந்து தொழுகை நடந்து வருகிறது. இரவுத் தொழுகையும் ஜும்ஆவும் நடத்தப்பட்டு வருகிறது. இஃப்தாருக்கான ஏற்ப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் ரூபாய் ஒன்றரை இலட்சம் செலவு செய்யப்பட்டு இருக்கிறது இனஷாஅல்லாஹ் .அல்லாஹ்வுடைய உதவியையும் அல்லாஹ்வுக்காக மறுமையை எதிர்பார்த்து உதவி செய்யும் நம் சகோதரர்களின் உதவியையும் கொண்டு விரைவில் சுமார் பதினோரு இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிவாசல் கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுடைய ஆலயத்திற்கு உதவிசெய்ய நினைப்பவார்கள் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 


 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

14-8-2009

அல்லாஹ்வுடைய மாபெரும் கருணையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்க்காக புதுவலசை காயிதேமில்லத் நகரில் (உமர் ஊருணிக்கு பின்புறம்) வாங்கப்பட்ட ஐந்து செண்டு இடத்தில் ரமளான் மாதத்தில் தொழுகை நடத்துவது என்று முடிவு  செய்யப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது.

வேலியடைத்தல் கூறையமைப்பு மற்றும் கிணறுவேலைகள் நடந்து வருகிறது. ஆர்வம்முள்ள சகோதரர்கள் உங்கள் உதவிகளை எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நமதூரில் கடந்த சில வாரங்களாக இமாம் ஜமாஅததை புறக்கணித்து ஐவேலை தொழுகையையும் ஜும்ஆவையும் தொழுது வருகிறோம் இந்நிலையில் காயிதேமில்லத் நகர் பகுதியில் தனியாக பள்ளிவாசல் கட்டுவது என தீர்மாணித்து அதற்க்காக ஒரு இடமும் பார்த்து முன்பணம் கொடுத்துள்ளோம். இன்ஷாஅல்லாஹ் விரைவில் அந்த இடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளைக்காக பதிவு செய்யப்பட்டு கட்டிட வேலைகள் தொடர உள்ளது. உங்கள் உதவிகளை எங்களுக்கு அனுப்பித் தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே....