புதுவலசை 3 மாத சிறுவனின் இதய அறுவைசிகிச்சைக்கு அவசர உதவி தேவை

23/07/2011 20:59

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 
அன்பார்ந்த சகோதரர்களே!
நமதூரைச் சார்ந்த சகோரர் சித்தீக் (சில வருடங்களுக்கு முன் லியாக்கத் அலி டாக்டரிடம் உதவியாளராக பணியாற்றியவர்) அவர்களுக்கு 3 மாத ஆண்குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார் உடனே இராமநாதபுரத்தில் வைத்து பார்த்து வந்தனர். மருத்துவர்களின் கணிப்பின்படி அந்த 3 மாத சிறுவனின் இதயத்தில் பாதிப்பு இருப்பதாகவும் உடனே ஆப்பரேசன் செய்யும் படியும் சொல்லிவிட்டதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான். அங்கு அச் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் ஒரு வால்வு சரியாக இயங்கவில்லை எனவும் அதை சரிசெய்யும் சிகிச்சை பெங்களுரு அல்லது கொச்சியில்தான் இருக்கிறது எனவும் கூறி கொச்சி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். உடனே நேற்று அச்சிறுவன் கொச்சி கொண்டுசெல்லப்பட்டுள்ளான். அச்சிறுவனின் மருத்துவ சான்றிதழ் கீழே தரப்பட்டுள்ளது.
 
இச்சிறுவனின் அறுவைசிகிச்சை அவசரமாக இன்று காலை செய்து முடிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்... ஆனால் அதற்கான செலவீனங்களை தாங்கும் அளவுக்கு சகோதரர் சித்திக் அவர்களிடம் பொருளாதாரமோ மருத்துவமனையில் இருந்து கணக்கு முடித்து சிறுவனை அழைத்துவர போதுமான பணவசதியோ இல்லை.
 
எனவே இந்த மெயில் கிடைக்கப்பெரும் சகோதரர்கள் உங்களால் இயன்ற உதவியை தாராளமாக புதுவலசை சகோதரர்களிடம் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அல்லது கீழே தரப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
பனைக்குளம் நத்தத் ஆலிம் அவர்களின் பேரன் இந்தச் சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரம்
 
Account Name : FAROOK JAILANI, (சகோதரர் சித்திக் அவர்களின் மைத்துனர்)
Indian Oversease Bank A/C: 8949
Branch : Alagankulam Br
அப்துல் ஹலீம்
புதுவலசை.இன்
00971-50 8845461