புதுவலசையில் புதிய கிளை துவங்க RDCC வங்கி ஒப்புதல்

27/10/2010 12:59

கடந்த சில நாட்களுக்கு முன் நமதூர் தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு வங்கி கிளை சம்மந்தமான ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் நகலை நாம் முந்திய செய்தியில் வெளியிட்டும் இருந்தோம். அதன் விளைவாக இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஆட்சியர் ஹரிஹரன் நமதூர் கழகத்தினரையும் பல்வேறு வங்கி அதிகாரிகளையும் அழைத்திருந்தார். அதில் ஆட்சியர் ஹரிஹரன் 10,000 மக்கள் பயன்பெறும் புதுவலசை கிராமத்தில் வங்கி துவங்க முன்வரவேண்டும் என வங்கி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் RDCC வங்கி அதிகாரிகளைத் தவிர வேரெவரும் முன்வரவில்லை.

 

தற்போதைய வங்கி சேவைகளில் வெளிநாடுகளில் வாழும் மக்களால் பயன்படுத்த முடியாத, ஆன்லைன் வசதி செய்யப்படாத வங்கி RDCC என்பதால் அந்த வங்கியின் கிளை திறந்தாலும் பயன் இல்லாமல் போகும் நிலை உள்ளது. ஆகவே அடுத்த குறை தீர்க்கும் கூட்டத்தில் வேறு வங்கி கிளைதிறக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெறிகிறது.

 

செய்தி பசுலுதீன் அவர்கள்