புதுவை முஸ்லிம்களுக்கு 2% இடஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டது!

01/09/2010 09:27

 

புதுவை யூனியன் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மற்றும் மீனவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சரவையின் முடிவை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் பிற்பட்டோருக்கு வழங்கப்படும் 13 சதவீத இடஒதுக்கீட்டில் பிற்பட்ட இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக 2 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்பட்டோருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் மீனவர்களுக்கு 2 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக-பொருளாதார திட்டங்களின் கீழ் பயன்களைப் பெறுவதற்காக அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த அரசாணைகள் அரசு இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

புதுச்சேரி அரசின் சிறப்புச் செயலர் தேவ நீதிதாஸ் இத்தகவலை பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Inneram