புனேவில் 5 குண்டுகள் வெடிப்பு: 6வது குண்டு செயலிழப்பு

01/08/2012 21:28

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஐந்து குறைந்த சக்திகொண்ட குண்டுகள் வெடித்தன. ஆறாவது குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

புனே நகரின் மிகவும் பரபரப்பான ஜங்க்ளீ மகராஜ் சாலையில் இன்று மாலை வெடித்த இந்த குண்டுவெடிப்பால், ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பல்கந்தார்வா திரையரங்கு, தேனா வங்கி கிளை, மெக்டோனால்ட் முனை, அந்தப் பகுதியில் இருந்த குப்பைத் தொட்டி ஆகிய இடங்களில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. இந்தப் பகுதிகள் அனைத்தும் சுற்றிவளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது என்று போலீஸார் கூறினர். மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் போலீஸார் மற்றும் வெடிகுண்டுகள் அகற்றும் பிரிவு நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துள்ள டிஜிபி சஞ்சீவ் தயாள், சம்பந்தப் பட்ட இடங்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார். தினமணி

 

https://www.youtube.com/watch?v=v5vkh5DreN4&feature=player_embedded