புரோஹித் ராணுவத்தால் நியமிக்கப் பட்டவர்-அதிர்ச்சித் தகவல்

01/07/2012 20:33

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்துவரும் லெப்ட் கலோனல் புரோஹித், இந்து பழமைவாத இயக்கமான அபிநவ் பாரத் அமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ராணுவத்தால் நியமிக்கப்பட நபர் என்ற உண்மை தெரியவந்துள்ளது இது, ராணுவ வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர் தீவிரவாதி இல்லை என்றும் இரண்டு வேறு மட்டத்திலான விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் புரோகித் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "நான் அபினவ் பாரத் அமைப்பில் சேர்ந்து உளவு பார்க்க ராணுவ உயர் மட்டத்தால் அனுப்பப்பட்டேன். என் வேலையை நான் ஒழுங்காகச் செய்தேன். என் தலைமைக்கு அனைத்தையும் நேர்மையாக அனுப்பி வைத்தேன். அனைத்து தகவல்களும் ராணுவக் கோப்புகளில் முறையாக வைக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.


Read more about புரோஹித் ராணுவத்தால் நியமிக்கப் பட்டவர்-அதிர்ச்சித் தகவல் [5141] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com