புழுதிப்புயலுக்கு 40 பேர் பலி

22/05/2011 17:29

உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் புழுதிப்புயல் தாக்கியதால் சிறுவர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடும் மழையுடன் புழுதிப் புயலும் வீசியதால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. கூரை வீடுகள் பலவும் பலத்த சேதமடைந்துள்ளன.
 
லக்கிம்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புழுதிப்புயலால் 4 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயரிழிந்தனர் என்று அம்மாவட்ட கூடுதல் மாஜிஸ்ரேட் துலசிராம் கூறியுள்ளார்.மரம் வேரோடு பெயர்ந்து வீட்டின்மீது விழுந்ததில், வீட்டில் இருந்த கணவன்,மனைவி இருவரும் உயரிழந்தனர்.ஷாஜஹான்பூரில் 16 பேர் உயரிழந்துள்ளனர்.
 
கோடைக்காலங்களில் உ.பி மாநிலத்தில் ஏற்படும் புழுதிப்புயல் கங்கை,யமுனா ஆற்றுப்படுகைகளிலிருந்து இடம் பெயரும்போது அங்குள்ள விளம்பர பலகைகள்,மரங்கள், சாதாரண கட்டடங்கள் சேதமடையும். ஒருமணிநேரம் வீசினாலும் பலத்த சேதத்தை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்நேரம்.உழஅ