பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம்!

10/12/2010 14:17

பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம்!
 
அமெரிக்காவின் ராணுவ மற்றும் தூதரக ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு உலகையே பரபரப்பைல் ஆழ்த்தியது. இதையடுத்து அமெரிக்காவின் மிரட்டலை தொடர்ந்து அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கே இங்கிலாந்தில் தலைமறைவானார்.

 

இந்த சூழ்நிலையில் சுவீடனில் 2 பெண்களை கற்பழித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச போலீஸ் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
 
இதை தொடர்ந்து லண்டனில் வெஸ்மினிஸ்டர் நகர மாஜிஸ்திரேட்டு ஐகோர்ட்டில் சரண் அடைய சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். அந்நீதிமன்றம்  அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது.

இந்நிலையில்  விக்கிலீக்ஸ் இணையதளத்தின் தகவல் திரட்டிகள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் பற்றி தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

சுவீடனின் ஸ்டாக்ஹோம் என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் பையனென் என்ற தகவல் மையம் அமைந்துள்ளது.

இந்த மையத்தில் தான் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் வந்துள்ளது.

 இந்த தகவல் மையத்தில் உள்ள சூப்பர் சர்வர்கள்,   பல நிறுவனங்களுக்கு தங்கள் பணியினை வழங்கிவருகிறது. பெரிய குகை போல் காணப்படும் இந்த தகவல் மையம் கிரானைட்டை குடைந்து கட்டப்பட்டுள்ளது.

இங்கு மிதக்கும் கருத்தரங்கு அறை, கண்ணாடி கதவுகள், மரவேலைபாடுகளுடன் அமைந்த அறைகள் ஆகியவை பார்ப்பதற்கு பிரமிப்பூட்டுகின்றன. மேலும் செயற்கையான நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த உயிருள்ள செடிகள், சோலார் விளக்குகள் போன்றவையும் அமைந்துள்ளன.

விக்கிலீக்ஸ் வைத்துள்ள தகவல்கள் அனைத்தும் அதிக கொள்ளளவு கொண்ட ஒரு மெமரி ஸ்டிக்கின் உதவியால் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் தெரிவிக்கிறது. nakkheeran.com