மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து தேசிய அடையாள அட்டை

21/12/2009 16:04

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

21-12-2009

இந்திய கடலோர மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து தேசிய அடையாள அட்டைக்கான பணிகளும் ஒவ்வொரு ஊராக நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களாக நமதூரில் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் கடந்த முறை கணக்கெடுக்கப்பட்ட நான்காவது வார்டு தகவல்கள் கணினியிலிருந்து கிடைக்காத காரணத்தால் 4ம் வார்டுக்கு நேற்று மீண்டும் கணக்கெடுப்பு நமதூர் அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தொடர்ந்து இன்றும் விடுபட்டவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை புகைப்படம் எடுக்க கடைசிநாள் என அறிவிக்கப் பட்டுள்ளது.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை அவர்கள் இந்தியா வந்து அதற்க்கென தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ள சிறப்பு கவுன்டர்களில் எடுத்துக்கொள்ளலாம் என தெறிகிறது.