மக்கள் தொகை குறைவால் பொருளாதாரம் சரிந்தது எனவே திருமண வயது வரம்பை குறைக்க வேண்டும் - அஹமது நிஜாத்

23/11/2010 14:42

 

முஸ்லிம் ஷியாப்பிரிவினர் அதிகம் வசிக்கும் ஈரான் நாட்டில் கடந்த 1979-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அங்கு மக்கள் தொகை உயர்ந்து இருந்ததின் காரணமாக 1990-ம் ஆண்டு முதல் இங்கு குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமல் படுத்தப்பட்டது.

 
 

ஆண்களின் திருமண வயது 26 எனவும், பெண்களின் திருமண வயது 24 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் குறைந்தது.  இதற்கு ஈரான் அதிபர் அகமதி நிஜாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் தொகை குறைந்ததால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இது இயற்கை மற்றும் கடவுளுக்கு எதிரான செயல் என்றும் மேலை நாடுகளின் இறக்குமதி திட்டம் என்று கூறினார்.

இந்நிலையில் அவர் ஆட்சிக்கு வந்ததும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். இனி பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு சார்பில் ஊக்க தொகை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், ஆண்-பெண் திருமண வயதை குறைக்கவும் வலியுறுத்தி வருகிறார். ஆண்களின் திருமண வயதை 19 அல்லது 20 ஆகவும், பெண்களின் திருமண வயதை 16 அல்லது 17 ஆக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.


இதன் மூலம் ஈரானின் மக்கள் தொகை கணிசமாக உயரும் எதிர்பார்க்கப்படுகிறது தற்போதைய ஈரானின் மக்கள் தொகை சுமார் 7 கோடியே 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Inneram.com