மண்டபம் யூனியன் பகுதியில் கலைஞர் வீடுகள் கட்டும் பணி தீவிரம்

13/10/2010 16:44

பனைக்குளம்,அக்.13-Dinathanthi

மண்டபம் யூனியன் பகுதி யில் கலைஞர் வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

கலைஞர் வீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட் டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டும் பணி தொடங்கி நடை பெற்று வருகிறது. இந்த பணி களை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வருகி றார். மண்டபம் ïனியனில் மொத்தம் 2 ஆயிரத்து 698 வீடு கள் ஒதுக்கீடு செய்யப் பட் டுள்ளது. இதில் 688 வீடுகள் கட்டும் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஹரிகரன்,திட்ட இயக்குனர் ஆனந்தராஜ், மண் டபம் ïனியன் தலைவர் கலை மதிராஜா,ஒன்றிய கவுன் சிலர் கனகராஜன் மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்ட அதிகா ரிகள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த னர்.

தீவிரம்

பணிகள் துரித மாக நடை பெற கட்டுமான பொருட்க ளான செங்கல், மணல், ஜல்லி, சிமெண்டு ஆகியவை தங்கு தடையின்றி கிடைக்க அதிகா ரிகள் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.