மது, மாது, கேளிக்கை நடனத்துடன் சவூதி இளவரசர்களின் விருந்து : விக்கி லீக்ஸ்

10/12/2010 22:27

மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது வளைகுடாவில் குற்றச் செயல்கள் மட்டுமல்ல, மது, மாது, கேளிக்கைகள் கிடைப்பதும் அரிது. அதிலும் குறிப்பாக சவூதி அரேபியாவில் இதையெல்லாம் நினைத்து கூட பார்க்கவே முடியாது என்று அனைவரும் சொல்வது உண்டு. அந்த சித்திரத்தை உடைக்கும் முகமாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் பழமைவாத சவூதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க தூதரகங்களில் நடைபெற்ற உரையாடல்களை வெளியிட்டு ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி பரபரப்பாக்கும் விக்கிலீக்ஸின் புதிய தகவலை இங்கிலாந்திலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திகை வெளியிட்டுள்ளது. ஜித்தாவிலுள்ள தூதரகங்களிலிருந்து வெளியான செய்திகளின் படி அல் துனைன் குடும்பத்தினர் கடந்த ஆண்டு ஹலோயின் விருந்து ஒன்றை பதுங்கு குழியில் உள்ள ஹாலில் கொடுத்துள்ளனர்.

 

ஆனால் அச்செய்தியில் விருந்து கொடுத்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் அவ்விருந்தை அமெரிக்க குளிர்பான நிறுவனம் ஒன்று ஸ்பான்ஸர் செய்ததும் தெரிய வந்துள்ளது. சவூதி அரேபிய சட்டத்தின் படி மது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தும், அவ்வறையின் உள்ளே நிறைய மது பாட்டில்கள் பரிமாறப்பட்டன. விருந்துக்கென்றே தருவிக்கப்பட்ட பிலிப்பைன் பெண்கள் புடை சூழ ஆட்டம் பாட்டத்துடன் கேளிக்கைகள் நடந்துள்ளது.

 

 

இது போன்ற விருந்துகளில் கொக்கைன் மற்றும் ஹஷிஷ் பயன்படுத்துவது சாதாரணமானது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அக்கேபிளில் சவூதியில் உள்ள இளவரசர்கள் மற்றும் ஷேக்குகள் வீடுகளில் உள்ள கீழ் தளத்தில் பலத்த காவலை விலக்கி பார்த்தால் உள்ளே பார், டிஸ்கோ, கிளப் என அனைத்தும் உள்ளதாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

 

 

 

அவ்விருந்தில் 20 முதல் 30 வயதுள்ள 150 சவூதி ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டதாகவும் சவூதியின் சாதாரண இரவு நேர விருந்தில் காணப்படுவதை போல் ஏராளமான மதுவுடன், இளம் தம்பதிகள் பிரத்யேக பாடகர் பாடலுக்கு நடனமாடினர். நைஜீரியாவை சேர்ந்த வாலிபர்கள் தான் பொதுவாக சவூதி இளவரசர்களின் வீடுகளில் காவல் காப்பார்கள் என்றும் சவூதியில் உள்ள சுமார் 10,000 இளவரசர்களில் அனைவரையும் இது போல் குறை சொல்ல முடியாது என்றாலும் இன்னும் என்னென்ன ரகசியங்கள் வெளிவருமோ என்ற கலக்கம் சவூதிய அரச குடும்பத்தினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. inneram.com